“அக்..சஞ்..சர். அப்பாடா, வந்துட்டன் பா!” என்று அவளிடம் அவளே பேசிக் கொண்டு அவசரமாய் அலுவலகத்திற்குள் நுழைகிறாள் அஞ்சலி. கண்டவர்க்கெல்லாம் ஒரு காலை வணக்கத்தைத் தூவிக்கொண்டே தனது மேசையில் அமர்ந்து வேலையைத் துவங்குகிறாள்.
கடந்த ஆறு மாதங்களாய் அங்குதான் பணி செய்து வருகிறாள். என்றாலும், ஒவ்வொரு திங்கட்கிழமையின் போதும் அவளை ஏதோ ஓர் இனம்புரியா தடுமாற்றம் வந்து மோதும்.
அவளமர்ந்து ஒரு அரைமணி நேரம் ஆகியிருக்கும். அவளது அடிவயிறு அப்போது இலேசாக வலிக்க ஆரம்பிக்கிறது.
“ஐயோ, எதுக்கு இந்த வயிறு இப்பிடி வலிக்குது? வேல நிறையா இருக்குது. ஒருவேள பீரியட்ஸா இருக்குமோ? அட, அது இப்பதான வந்தது!” என்று அவள் ஊகித்துக்கொண்டு இருக்கும் போதே தன் உள்ளாடை நனைவதை உணர்கிறாள்.
“கடவுளே! இன்னைக்குன்னு பாத்து நான் வெள்ளப் பேன்டெல்லாம் வேற போட்டுட்டு வந்தேனே!” என்று புலம்பிக்கொண்டே அதுவரை விசைப்பலகை மேல் வீருநடை போட்டுக்கொண்டிருந்த விரல்களை விரைவாகத் தன் கைப்பைக்குள் விட்டு நெகிழிச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஆறு *விடாய்க்கால அணையாடைகளில் ஒன்றை விடுவிக்கிறாள்.
“எடுத்துட்டன். ஆனா, எப்படி போக அங்க? இடையில எத்தன பேரு நிப்பாங்க! இல்ல, பர்ஸ எடுத்துட்டுப் போனா எனக்குப் பீரியட்ஸ்னு எல்லாரும் கண்டுபிடிச்சிருவாங்க!” என்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த அந்த அணையாடையை யாரும் காணா வண்ணம் தன் மேற்சட்டைக்கடியில் செருகிக் கொள்கிறாள். தனக்கு இருமல் வந்தது போல் செருமிக் கொண்டே வேகமாக நடந்து கழிவறைக்குச் செல்கிறாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து வெளிவந்தவள் அதிர்ந்தே போகிறாள்.
“ஹே கைஸ், வாட்ஸ் ஹப்பனிங் ஹியர்? ஏன் அஞ்சலி மேசையில இப்படி செக் பண்ரீங்க?” என்று அதிர்ச்சியில் சிலர் வினவுகின்றனர். அதனைக் கண்டு கொள்ளாது ஒருசிலர் அவளிடத்தை ஆத்திரமாய்த் தொடர்ந்து துழாவுகின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல், தங்கள் வேலையைக் கூட விட்டுவிட்டு வெகுசிலர் அதை வேடிக்கை பார்க்கின்றனர்.
ஆறு மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்தவள் வேறென்ன செய்வாள்? அனைத்தையும் அரை நிமிடத்தில் கண்டதால் அழுதேவிடுகிறாள். அந்நேரம் சக ஊழியர் ஒருவர் அவளருகே வருகிறார்.
“அஞ்சு, வர் ஹவ் யு பீன்? பிரியாஸ் பர்ஸ் இஸ் மிஸ்ஸிங்.”
“ஸோ, அத என் இடத்துல வந்து ஏன் தேடுறீங்க? வொய் ஆர் யு சர்ச்சிங் ஃபார் தட் அட் மை பிலேஸ், ஐ மீன்?”
“அஞ்சு, ஜோசப் ஹஸ் ஸீன் யு ஹைடிங் சம்திங். வாட் டிட் யு ஹைட், தென்?”
“நோ! நான்…”
“தப்பு பண்றவங்க தான், தான் தப்பிக்க மறைப்பாங்க. ஸோ, ஸே! நீ எத மறைச்ச?”
*விடாய்க்கால அணையாடை – sanitary napkin
🙏 all the best.
Thank you! 😊🙏